மருத்துவம் பயில்வோம்

 நமக்கு எடுத்துக்காட்டாக வாழ்ந்த ஒரு சமுதாயத்தைக் கவனித்து அறிந்துகொள்ளாமல் நோய்களையும் மருந்துகளையும் படித்துக் கொண்டிருக்கிறோம். இந்த நிலை மாற வேண்டும்.




நோயும் மருத்துவமும் (உடல் பற்றிய அடிப்படை புரிதலை ஏற்படுத்தும் தொடர்)
 
2. மருத்துவம் பயில்வோம் 

நோய் என்றால் என்னவென்றே அறியாமல், வாழ்நாளின் இறுதிக் காலம் வரையில் ஆரோக்கியமாக வாழ்ந்து வந்த ஒரு பரம்பரையைச் சேர்ந்த நமது இன்றைய நிலை என்ன? ஊருக்குள் யாரோ ஒருத்தர் நோயாளி என்ற நிலையிலிருந்து வீட்டுக்கு ஒருவர் நோயாளி என்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம். 

நோயில்லாமல் ஆரோக்கியமாக வாழ்வது எப்படி என்பதைச் சிந்திக்காமல், நோய்களுடன் அனுசரித்து வாழ்வது எப்படி என்பதைத் தான் பெரும்பாலான மனிதர்கள் சிந்திக்கிறார்கள். மனிதர்களால் நோய்நொடிகள் இல்லாமல் ஆரோக்கியமாக வாழ முடியும் என்று கூறினால் பெரும்பாலானவர்களால் நம்ப முடியவில்லை. மனிதர்கள் நோயில்லாமல் வாழ்வது சாத்தியமில்லை என்பது அவர்களின் மனதில் பதிந்துவிட்ட முன் முடிவாக இருக்கிறது. வீட்டின் சமையல் கட்டில் கிடைக்கும் எளிமையான உணவுப் பொருட்களைப் பயன்படுத்தி உடல் உபாதைகளைப் போக்கிக் கொண்டிருந்த நாம், மருந்து மாத்திரைகள் இல்லாமல் நோய்கள் குணமாகமாட்டாது என்று நம்பிக் கொண்டிருக்கிறோம். 

நவீன மருத்துவமனைகள் பெருகிவிட்ட இன்றைய காலகட்டத்திலும், நமது கிராமப்புறங்களில் மருத்துவர்களின் உதவி இல்லாமல் வீட்டிலேயே குழந்தைகள் சுகப்பிரசவமாகப் பிறந்து கொண்டுதான் இருக்கின்றன. ஆனால் தன்னை, படித்த, வளர்ச்சி அடைந்த சமுதாயமாகக் கருதிக் கொண்டிருக்கும் பலர், வயிற்றைக் கிழித்து குழந்தையை வெளியில் எடுப்பதை பிரசவம் என்று நம்புகிறார்கள். அனைத்துக்கும் மேலாக அறுவை சிகிச்சை என்ற பெயரில், உடலை அறுப்பதும், உடலின் உறுப்புகளை நீக்குவதும் மருத்துவம் என்று நம்பும் அளவுக்கு உடலைப் பற்றிய அறிவையும் மருத்துவ அறிவையும் இழந்துள்ளது இன்றைய நவீனச் சமுதாயம். 

வாழ்நாள் முழுமைக்கும் ஆரோக்கியமாக வாழ்வதற்கு உடல், மனம், மற்றும் நோய் பற்றிய புரிதல் அனைவருக்கும் அவசியம். எந்த ஒரு தடுப்பூசியும், சத்து மாத்திரையும், மருந்து மாத்திரையும் இல்லாமல், வீட்டிலேயே பத்துப் பிள்ளைகளை ஆரோக்கியமாகப் பெற்று வளர்த்து ஆளாக்கிய நமது முன்னோர்களின் வாழ்க்கை முறைகளை கவனிக்கத் தவறிவிட்டோம். அவர்களின் வாழ்க்கை முறைகளையும், உணவு முறைகளையும் பின்பற்றத் தவறிவிட்டோம். 

நமக்கு எடுத்துக்காட்டாக வாழ்ந்த ஒரு சமுதாயத்தைக் கவனித்து அறிந்துகொள்ளாமல் நோய்களையும் மருந்துகளையும் படித்துக் கொண்டிருக்கிறோம். இந்த நிலை மாற வேண்டும். சித்த மருத்துவம், ஆயுர்வேதம், அக்குபஞ்சர் போன்ற பல இயற்கை மருத்துவ நூல்கள் எளிதாக எல்லா இடங்களிலும் கிடைக்கக் கூடிய நிலை உருவாகிவிட்டது. 

நம்பகமான இயற்கை மருத்துவர்கள் எழுதிய நூல்கள் மற்றும் மருத்துவக் குறிப்புகளை வாசித்துப் புரிந்து கொண்டு வாழ்க்கையில் பின்பற்ற வேண்டும். 

நமது சரியான வாழ்க்கை முறையையும், உணவு முறையையும், மருத்துவ அறிவையும், நமது பிள்ளைகளுக்கும் எதிர்காலச் சந்ததியினருக்கும் கற்றுத்தர வேண்டும். 

ஆரோக்கியமாக வாழப் பழகிக்கொண்டால், நோய்களைக் கண்டு அஞ்ச வேண்டிய தேவையிருக்காது.

தொடரும்...

நன்றி - ஹீலர் ராஜா முகமது காசிம்




Comments